FREEGOSPELSONGS

ALBUM INFO

அறிமுகம்

Intro

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions



Credits

பெலன் ஒன்றும்

Belan ondrum

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions




Credits


வருவாய் தருணம்

Varuvai tharunam

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை --(2)

வாழ்நாளை யெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன் –(2)
வல்லவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னை சேர்த்துக் கொள்வார்
--வருவாய்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும் –(2)
கூடுவிட்டு உன் ஆவி போனால்
கூட உன்னோடு வருவதில்லை
--வருவாய்

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே --(2)
மரணம் ஓர் நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை
----வருவாய்

Varuvaai tharunam ithuve azhaikkirare
Valla aandavar yesuvandai

Vaazhnaal yellam veen naalaai
Varuthathode kazhippathu yen (2)
Vallavar paadham saranadaindhaal
Vaazhvithu unnai serthu kolvaar
-- Varuvaai

Kattina veedum nilam porulum
Kanndidum utrar uravinarum (2)
Koodu vittu un aavi ponaal
Kooda unnodu varuvathillai
-- Varuvaai

Azhagu maayai nilaithidathe
Athai nambathey mayakkidume (2)
Maranam oar nall sandhikkume
Maravaathey un Aandavari
-- Varuvaai



Credits

Music - Bro. James Vasanthan

திருப்பாதம்

Thiruppatham

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
உமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே --(2)

என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும் --(2)
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே --(2)
--திருப்பாதம்
மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டல் கேட்டிடுவீர் --(2)
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன் --(2)
--திருப்பாதம்

என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும் --(2)
உமக்காய் யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே --(2)
--திருப்பாதம்


Thiruppaatham nambi vandhen
Kirubai nirai yesuve
Umathanbai kandadaindhen
Deva samugathile --(2)
-- Thiruppaatham

Ennai nokki kooppidu enreer
Innal thunba nerathilum –(2)
Karuthaai visaarithu yendrum
Kanivodennai nokkidume –(2)
-- Thiruppaatham

Manam maara maandhan neeralla
Mana vendal kettiduveer –(2)
Yenathullam ootri jebiththey
Yesuve ummai andiduven –(2)
-- Thiruppaatham

Ennai kaividaathirum naadhaa
Yenna nindhai neridinum –(2)
Umakkaai yaavum sagippen
Umathu belan eenthidume –(2)
--Thiruppaatham



Credits

Music by : Bro. James Vasanthan

ஸ்தோத்தரிப்பேன்

Sthotharippen

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
எந்தன் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் நான்

உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை --(2)
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் நான் --(2)
--ஸ்தோத்தரிப்பேன்
பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக --(2)
உம் சுத்தமான ரத்தத்திற்குள் தோய்த்ததினாலே --(2)
--ஸ்தோத்தரிப்பேன்
என்னுடைய நோய்களை உம் காயங்களாலே --(2)
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் நான் -(2)
--ஸ்தோத்தரிப்பேன்
ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் --(2)
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் நான் --(2)
--ஸ்தோத்தரிப்பேன்

Sthotharippen Sthotharippen yesu devanai
Yenthan jeevanulla natkkalellam sthotharippen naan

Uthadugalin kaniyaagiya sthothira baliyai --(2)
Yesuvin naamaththinale seluththukiren naan --(2)
-- Sthotharippen
Paavakkarai neenga yennai muttrilumaaga --(2)
Um suththamaana raththathirkkul thoiththathinaale –(2)
-- Sthotharippen
Yennudaiya noigalai um kaayangalaale --(2)
Yenraikkumaai theerththathinaal sthotharippen naan –(2)
-- Sthotharippen
Aaagaayaththu patchigalai boshikkum devan –(2)
Dinamum yennai boshippathal sthotharippen nan –(2)
-- Sthotharippen



Credits

Music by : Bro.James Vasanthan

பலி பீடத்தில்

Bali peedathil

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions




Credits


எங்கே ஓடுவேன்

Enge oduven

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ நிலவினிற்கோ எங்கே ஓடுவேன்

ஆழ்கடலினில் எனக்கு முன்பாக இயேசு சென்றுவிட்டீர் (2)
பாதாளமே சமுத்திரமே மறைக்கமாட்டாயோ ?
எங்கே ஓடுவேன் நான் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ நிலவினிற்கோ எங்கே ஓடுவேன்

மலைகளே குன்றுகளே மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபதி வந்துவிட்டார் ஐயோ நான் அதமாவேன் --(2)


என்னிடம் ஓடி வந்தால் நீ பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே --(2)

அழைக்கின்றார் இயேசு ராஜா வந்தேன் அடிமை இதோ
ஓடி வந்தேன் இதோ (4)

உம் பாதமே என் தஞ்சமே அடைக்கலம் உணர்ந்தேன்

Yenge oduven yenge oduven
Yenge oduven naan enge oduven
Vaanaththirko nilavinirko yenge oduven

Azhkadalinil enakku munbaaga yesu sendru vitteer(2)
Paathalame samuththirame maraikka maattayo?
Enge oduven naan enge oduven
Vaanathirko nilavinirko enge ooduven

Malaigale kunrugale maraiththu kollungale
Neethipathi vandhuvittar iyo naan athamaaven --(2)

Ennidam odi vandhaal nee pizhaippaai
Undhan thanjam naane --(2)

Azhaikkiarar yesu raajan vanthen adimai itho
Odi vandhen itho(4)
Um paathame en thanjame adaikalam unarndhen



Credits

Music by : Bro. James Vasanthan

அன்பில் என்னை

Anbil ennai

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும் --(2)
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ --(2)

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான் --(2)
இன்னும் நன்றியுடன் துதிப்பேன் –(2)

முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க --(2)
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர –(2)
-- என் இயேசுவே
நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் இதற்கு என்ன பதில் செய்குவேன்
இம் மகா நோக்கம் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே
-- என் இயேசுவே

Anbil ennai Parisuththanaakka
Ummai kondu sagalaththayum –(2)
Uruvaakkiye neer muthar peraaneero
Thandhai nokkam anaathiyandro –(2)

En yesuve nesitheero
Yemmathiram mannaana naan –(2)
Innum nandriyudan thuthippen –(2)

Munnarindhey ennai azhaitheere
Muthar perai neer irukka –(2)
Aaaviyaal abishegitheer ennaiyume
Um saayalil naan valara –(2)
-- En yesuve
Nandriyaal en ullam niraindhiduthey
Naan itharkkenna bathil seiguven --(2)
Immaga nokkam mutrumaai niraiverida
Ennai thandhen nadaththidume --(2)
-- En yesuve



Credits

Music - Bro. James Vasanthan

உணர்ந்தேன்

Unarndhen

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions




Credits


அநாதி தேவன்

Anaadhi Devan

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்தியப் புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதாகாலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நிழல் கொடுத்து உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

கானகப் பாதை சூழும் இருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

கிருபை கூர்ந்து மனது உருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்

வறண்ட வாழ்க்கை செழிப்பாய் மாறும்
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
துயரமும் தவிப்பும் ஓடிடும்



Credits

Original Song: Sis Sarah Navaroji
Orchestration: James Vasanthan
Singer:James Vasanthan
Programming: Vibin Baskar
Studio: Miracle Sound Bay
Mix & Master: Vibin Baskar

தேவனே நான்

Devane naan

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

தேவனே, நான் உமது அருகினிலே
இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியிலே

பாவமாக கோரமாக கொடிய சிலுவை மீதினில் நான்
நொந்து தொங்க நேரிட்டாலும்
ஆவலாய் நான் உம்மைச் சேர்வேன்

யாக்கோபைப்போல் போகும் பாதையிலே
பொழுதாகி மெல்ல
 இரவும் வந்து இருளும் மூடிட
 தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் எந்தன் கனவில்
உம்மை நோக்கி வந்துச் சேர்வேன்
சொல்ல இயலா நல்ல நாதா

பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்
 பண்ணும் ஐயா, எந்தன் தேவனே
 கிருபையாக நீர் எனக்கு
தருவதெல்லாம் உந்தன் மீட்பு
 அன்பைக்கொண்டு என்னை அழைத்தீர்
அன்பின் தேவா, உம்மைச் சேர்வேன்

பொழுது விடிந்து காலை எழுந்ததுமே
மகிழ்வோடு மனதாய் 
 கர்த்தரே, நான் உம்மைப் போற்றுவேன்
 இந்த உலகில் உந்தன் வீடாய்
எந்தன் துயரை நாட்டுவேனே
 துன்ப துயரப் பாதை வழியே
இன்னும் உம்மைக் நெருங்கிச் சேர்வேன்



Credits

Original Song: Santiago Iyer
Orchestration: James Vasanthan
Singer: Nancy Stephen
Programming: James Vasanthan
Studio: Miracle Sound Bay
Mix & Master: Vibin Baskar

மகிழ்வேன் மகிழ்வேன்

Magizhven magizhven

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

மகிழ்வேன் மகிழ்வேன் தினம்
அகமகிழ்வேன்
இயேசு இராஜன் என்
சொந்தமாயினார்

இந்த உலகத்துக்கே சொந்தக்காரர்
அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ, ஆனந்தமே பேரானந்தமே

 இது மாபெரும் பாக்கியமே – இந்த

1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்

தூரம் போயினும் கண்டு கொள்வார்

தமது ஜீவனை எனக்கும் அளித்து

ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்

2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பில் இருந்து

என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்

என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை

அவர் வரும்வரைக் காத்துக்கொள்வேன்

3. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து

அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்

அவர் சமுகமதில் அங்கே அவருடனே

ஆடிப்பாடியே மகிழ்ந்திருப்பேன்



Credits

Original Song: Bro. Emil Jebasingh
Orchestration: James Vasanthan
Singer: Roshan Wesley
Programming: James Vasanthan
Studio: Miracle Sound Bay
Mix & Master: Vibin Baskar