FREEGOSPELSONGS

ALBUM INFO

கர்த்தாதி கர்த்தர்

KARTHADHI KARTHAR

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்
உயர்ந்த அடைக்கலமே
என் தேவாதி தேவன் என் இயேசு ராஜன்
உயர்ந்த அடைக்கலமே ஓ ஓ
எந்தன் கண்மலையே

சீனாய் மலையில் இறங்கிய தேவன்
செங்கடல் நடுவே நடத்திய தேவன்
இன்றும் என்னோடிருப்பதினாலே
கலக்கம் எனக்கில்லையே
உந்தன் வசனம் எனக்கு வெளிச்சம்
உந்தன் கரமே என்னை நடத்தும்
உந்தன் கிருபை என்னை தாங்கும்
உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன் - நான்
உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன்
- கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்

மாராவின் நீரை மதுரமாய் மாற்றி
தாகம் தீர்த்திட்ட சர்வ வல்ல தேவன்
இன்றும் என்னோடிருப்பதினாலே
குறைவு எனக்கில்லையே
உந்தன் வார்த்தை எந்தன் ஜீவன்
உந்தன் நாமம் எந்தன் பெலனே
உந்தன் தயவே எந்தன் நிறைவு
உம் அன்பில் நிலைத்திருப்பேன் - நான்
உம் அன்பில் நிலைத்திருப்பேன் - கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

உங்களோடு

UNGOLDU

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உங்களோட(டு) நான் இருக்க
உங்களோட(டு) நான் பேச
ஒரு நாள் போதாதையா
உங்களோட(டு) நான் இருக்க
உங்களோட(டு) நான் பேச
ஒரு நாள் போதாதையா
நீர் எந்தன் நேசர் நீர் எந்தன் ராஜா
நீர் எந்தன் மேய்ப்பன் என் யேசுவே

உங்களோட வார்த்தைகள தினம் தினம் கேட்க
உங்களோட நான் இருந்து ரகசியம் பேச
உங்களோட வார்த்தைகள தினம் தினம் கேட்க
உங்களோட நான் இருந்து ரகசியம் பேச
உங்க பாசம் மட்டும் இல்ல
உங்க நேசம் மட்டும் இல்ல
உங்க ஜீவன் தந்து மீட்டீரே

உங்களோட அழகான முகத்த பார்க்க
மகிமையில் மகிமையாக என்னை நடத்த
உங்களோட அழகான முகத்த பார்க்க
மகிமையில் மகிமையாக என்னை நடத்த
ஆவியால என்னை மறுரூபமாக மாற்றி
முடிவில்லா ஜீவன் தந்தீரே



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

அக்கினியும் நீரே

AKKIINIYUM NEERAE

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே
ஆலோசனை கர்த்தரும் நீரே
அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே
ஆலோசனை கர்த்தரும் நீரே

ஆவியே உம்மை வரவேற்கிறோம்
உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்
உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்

வாருமே நீர் வாருமே
ஒரு அக்கினியாய் இன்று இறங்கிடுமே
தாருமே நீர் தாருமே உம் ஆவியின் கொடைகளை தாருமே
வாருமே நீர் வாருமே
ஒரு அக்கினியாய் இங்கு இறங்கிடுமே
தாருமே நீர் தாருமே உம் ஆவியின் கொடைகளை தாருமே

உந்தன் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமே
உந்தன் வல்ல பிரசன்னதிலே நடத்திடுமே
உந்தன் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமே
உந்தன் வல்ல பிரசன்னதிலே நடத்திடுமே

ஆவியே உம்மை வரவேற்கிறோம்
உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்
உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்

வாருமே நீர் வாருமே
ஒரு அக்கினியாய் இங்கு இறங்கிடுமே
தாருமே நீர் தாருமே உம் ஆவியின் கொடைகளை தாருமே

உந்தன் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமே
உந்தன் வல்ல பிரசன்னதிலே நடத்திடுமே
உந்தன் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமே
உந்தன் வல்ல பிரசன்னதிலே நடத்திடுமே



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

உம்மையே தான்

UMMAIYAE THAAN

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உம்மையே தான் உம்மையே தான்
என் உள்ளம் வாஞ்சிக்குதே
உம்மையே தான் உம்மையே தான்
என் உள்ளம் வாஞ்சிக்குதே
என் நேசரே என் யேசுவே
உமக்காக உள்ளம் ஏங்குதே
உமைகாண என்றும் ஏங்குதே

உறங்காத எந்தன் கண்கள் உமை காண வாஞ்சை கொண்டு
உம் இல்லம் தேடி வந்ததே
தணியாத தாகத்தோடு அலைபாயும் மானைப்போலே
உம் வசனம் பருக வந்ததே
உறங்காத எந்தன் கண்கள் உமை காண வாஞ்சை கொண்டு
உம் இல்லம் தேடி வந்ததே
தணியாத தாகத்தோடு அலைபாயும் மானைப்போலே
உம் வசனம் பருக வந்ததே
என் நேசமே என் பிரியமே
உமதன்பு ஒன்றே போதுமே
என் நேசமே என் பிரியமே
உமதன்பு ஒன்றே போதுமே

மழை வேண்டி வானம் பார்க்கும் பயிர் போல எந்தன் மனம்
உம் ஆசீர் வேண்டி வந்ததே
தடுமாறும் எந்தன் கால்கள் உம் வார்த்தை தீபம் கண்டு
முன்னேற வாஞ்சை கொண்டதே
மழை வேண்டி வானம் பார்க்கும் பயிர் போல எந்தன் மனம்
உம் ஆசீர் வேண்டி வந்ததே
தடுமாறும் எந்தன் கால்கள் உம் வார்த்தை தீபம் கண்டு
முன்னேற வாஞ்சை கொண்டதே
என் ஜீவனே என் சுவாசமே
உமதண்டை என்னை சேருமே
என் ஜீவனே என் சுவாசமே
உமதண்டை என்னை சேருமே



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

விடிவெள்ளியே

VIDIVELLIYAE

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

விடிவெள்ளியே என் வெளிச்சம் நீரே
உமக்கே ஆராதனை
விடிவெள்ளியே என் வெளிச்சம் நீரே
உமக்கே ஆராதனை
விடிவெள்ளியே என் வெளிச்சம் நீரே
உமக்கே ஆராதனை
விடிவெள்ளியே என் வெளிச்சம் நீரே
உமக்கே ஆராதனை

என் வாழ்வின் காரிருள் வேளைகளில்
உம் வேதம் வெளிச்சமாய் நடத்தியதே
என் வாழ்வின் காரிருள் வேளைகளில்
உம் வேதம் வெளிச்சமாய் நடத்தியதே
வழியும் நீரே ஜீவனும் நீரே
முடிவில்லா காரணர் நீரே
வழியும் நீரே ஜீவனும் நீரே
முடிவில்லா காரணர் நீரே - விடிவெள்ளியே

உம் அன்பினால் நீர் என்னை அரவணைத்தீர்
உம் பாதையில் நடந்திட பெலன் அளித்தீர்
உம் அன்பினால் நீர் என்னை அரவணைத்தீர்
உம் பாதையில் நடந்திட பெலன் அளித்தீர்
எனக்காக பிறந்தீர் எனக்காக மரித்தீர்
கல்வாரி சிலுவையில் பாவங்கள் தீர்த்தீர்
எனக்காக பிறந்தீர் எனக்காக மரித்தீர்
கல்வாரி சிலுவையில் பாவங்கள் தீர்த்தீர் – விடிவெள்ளியே



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

அதிசயம் அற்புதம்

ATHISAYAM ARPUTHAM

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

அதிசயம் அற்புதம் நடக்குதே இயேசுவின் நாமத்தினால்
நோய்களும் பேய்களும் ஓடுதே இயேசுவின் நாமத்தினால்

வெற்றி உண்டு வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தினால் - நமக்கு
வெற்றி உண்டு வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தினால் - நம்
இயேசுவின் நாமத்தினால்

வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்
சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்
வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்
சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்
பாவ சாப வல்லமைகள் இன்று இங்கு அடங்கிடும்
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமமே சுகமளித்திடும் நாமமே - 2

தோல்விகளில் ஜெயமெடுப்போம்(பேன்) இயேசுவின் நாமத்தில்
சத்துருவை துரத்திடுவோம்(வேன்) இயேசுவின் நாமத்தில்
தோல்விகளில் ஜெயமெடுப்போம்(பேன்) இயேசுவின் நாமத்தில்
சத்துருவை துரத்திடுவோம்(வேன்) இயேசுவின் நாமத்தில்
ஜெயம் உண்டு சுகம் உண்டு பெலன் உண்டு சர்வ வல்ல
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமமே ஜெயமளித்திடும் நாமமே - 2

கலங்கிடேன் நான் திகைத்திடேன் நான் இயேசு எனக்குண்டு
என் சுகவாழ்வின்று துளிர்த்திடுதே இயேசுவின் நாமத்தில்
கலங்கிடேன் நான் திகைத்திடேன் நான் இயேசு எனக்குண்டு
என் சுகவாழ்வின்று துளிர்த்திடுதே இயேசுவின் நாமத்தில்
இன்று இங்கு இப்பொழுதே அதிசயம் கண்டிடுவேன்
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமமே என்னை மீட்டிடும் நாமமே - 2



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

பெலனின்றி

BELANINRI

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

பெலவீனன் நான் எந்தன் யேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே
பெலவீனன் நான் எந்தன் யேசுவே
பெலன் தாரும் எந்தன் நேசரே
உருமாற்றும் என்னை உருவாக்கும் இன்றே
உம்மைப்போல் மாறணுமே
உருமாற்றும் என்னை உருவாக்கும் இன்றே
உம் சித்தம் செய்யணுமே

பாதைகள் எங்கும் இருளானதே
பெலவீனம் என்னை குருடாக்குதே
பாதைகள் எங்கும் இருளானதே
பெலவீனம் என்னை குருடாக்குதே
பெலனே என் தேவா அருள் இயேசு நாதா
கரம் நீட்டி இன்றே கரை சேரும் கரை சேரும் தேவா
பெலனே என் தேவா அருள் இயேசு நாதா
கரம் நீட்டி இன்றே கரை சேரும் கரை சேரும் தேவா

சொந்தங்களின்றி தனியானேனே
சுகவீனம் என்னை தடுமாற்றுதே
சொந்தங்களின்றி தனியானேனே
சுகவீனம் என்னை தடுமாற்றுதே
எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதா
தாய்போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே
எனை காக்கும் தேவா குணமாக்கும் நாதா
தாய்போல தேற்றி இளைப்பாற்றும் இன்றே



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

உம்மை போல

UMMAI POLA

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

உம்மை போலே யாரும் இல்லையே
உங்க அன்பை போலே எதுவும் இல்லையே
உம்மை போலே யாரும் இல்லையே
உங்க அன்பை போலே எதுவும் இல்லையே

பரத்தினில் வேறொரு தேவனில்லை
இந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை
பரத்தினில் வேறொரு தேவனில்லை
இந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை

உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்
தாங்கி பிடித்ததொங்க கிருப
தவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்
தூக்கி எடுத்ததொங்க கிருப
கிருபையே மாறாத கிருபையே
கிருபையே இயேசுவின் கிருபையே

கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்
கரம் பிடிப்பதொங்க கிருப
காலம் மாறினாலும் சொந்தம் விலகினாலும்
கூட இருப்பதொங்க கிருப
கிருபையே மாறாத கிருபையே
கிருபையே இயேசுவின் கிருபையே

பாவம் நீக்கி என்னை பெலவானாக்கி
பரலோகம் சேர்ப்பதொங்க கிருப
வரங்கள் கொடுத்து என்னை வாரி அணைத்து
உம் பிள்ளையாக்கியது கிருப
கிருபையே மாறாத கிருபையே
கிருபையே இயேசுவின் கிருபையே



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

நன்றி சொல்ல

NANDRI SOLLA

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

நன்றி சொல்ல வார்த்தை இல்லையே
நீர் செய்த நன்மைகளுக்கு
எனக்கு ஒன்றும் அருகதையில்லை
உம் அன்பு கிடைப்பதற்கு
என் கண்ணீர் போதாதே
என் துதியும் போதாதே
என்னையே படைக்கிறேன் என் இதயம் தருகிறேன்
ஏசுவே என் நேசரே ஏசுவே என் தெய்வமே

உழையான சேற்றில் வாழ்ந்த என்னை தேடி வந்தீர்
உம் பாசக்கரங்கள் கொண்டு தூக்கி எடுத்தீர்
பாவமில்லா பரிசுத்தர் எனக்காக பலியானீர்
பரிசுத்த ரத்தத்தால் முற்றிலும் சுத்தீகரித்தீர்
ஏசுவே என் நேசரே ஏசுவே என் தெய்வமே - நன்றி சொல்ல

நிலையான அமைதி வேண்டி உம்மை தேடி வந்தேன்
உம் நேசக்கரங்கள் கொண்டு என்னை சுமந்தீர்
நிலையான அமைதி வேண்டி உம்மை தேடி வந்தேன்
உம் நேசக்கரங்கள் கொண்டு என்னை சுமந்தீர்
தூரம் சென்றபோதிலும் எனக்காக அலைந்தீர்
மறுபடி வந்ததும் மார்போடு அணைத்தீரே
ஏசுவே என் நேசரே ஏசுவே என் தெய்வமே - நன்றி சொல்ல



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

யெகோவா ஷம்மா

YEHOVAH SHAMMAH

By clicking the Download button below, I hereby agree to and accept the following

Terms and Conditions

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே
யெகோவா ராஃபா சுகம் தருபவரே
எபிநேசராய் என்னை நடத்திடுமே
யஹோவா நிசி எந்தன் ஜெயகொடியே

துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவா
உமக்கே உமக்கே இயேசு ராஜா
துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவா
உமக்கே உமக்கே இயேசு ராஜா

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

யெகோவா சிக்கேனு என் நீதி நீரே
யெகோவா ரூவா எந்தன் நல்மேய்ப்பரே
யெகோவா ஷாலோம் எந்தன் சமாதானமே
யெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர்

துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவா
உமக்கே உமக்கே இயேசு ராஜா
துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவா
உமக்கே உமக்கே இயேசு ராஜா

ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
ஆராதனை ஆராதனை அடோனாய் ஆராதனை
ஆராதனை ஆராதனை எல்லோஹிம் ஆராதனை



Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org