Vithaipoum

விதைப்பும் அறுப்புமே பூமியின்

Artist: Emil Jebasingh

Album: Emil Jebasingh Album 3

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
1. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில்
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

பல்லவி
சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே - இன்று
பிரதானம்

2. ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு - சிந்திப்பீர்

3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து - சிந்திப்பீர்

4. ஆழக் கடல்களில் படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ? - சிந்திப்பீர்
Credits

Produced by Bro. Emil Jebasingh

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More