Aandavare, Ummaiye Saarndhullen

ஆண்டவரே, உம்மையே சார்ந்துள்ளேன்

Artist: Christ-Life Fellowship

Album: Christ-Life Fellowship Tamil Songs

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
1.ஆண்டவரே, உம்மையே சார்ந்துள்ளேன்,
அடைக்கலப் பாறைமேல் சாய்ந்துள்ளேன்,
அரணான கோட்டையை நம்பியுள்ளேன்,
அணைத்து என்னைக் காத்திடுவீர்.

நீரே எந்தன் ஆண்டவர் என்பேன்! நீ
ரேயல்லால் செல்வம் வேறில்லை!
நீரே என் பங்கு, சுதந்தரம்!
நீரே என் பங்கைக் காக்கிறவர்!

2.இனிதான நிலங்கள் என் பங்கு,
வளமான சொத்துக்கள் என் சொந்தம்,
பங்கும், சொத்தும், சுதந்தரமும் நீரே,
மங்காத செல்வம் எல்லாம் நீரே.

3.ஆலோசனை ஆண்டவர் அருள்கிறார்,
அகத்தினுள் அறிவை உணா;த்துவார்,
அவர் குரல் இராக்காலமும் தொனிக்கும்,
ஆராதிப்பேன், அமர்ந்திருப்பேன்.

4.ஆண்டவரை என்முன்னே வைத்துள்ளேன்,
அவர் எந்தன் வலப்பக்கம் உள்ளார்,
ஆகவே நான் கலங்கேன், அசைவுறேன்,
ஆனந்தத்தால் நெஞ்சம் பூரிக்கும்.

5.என் ஆன்மாவைப் பாதாளத்தில் விடீர்,
உம் சுத்தனை அழிவைக் காணவொட்டீர்,
என் உடலும் உம் பாதுகாப்பில் தங்கும்,
நான் களிகூர்ந்து கெம்பீரிப்பேன்.
6.ஜீவ வழி எனக்குத் தெரிவித்தீர்,
உம் சமுகம் பூரண ஆனந்தமே,
உம் வலது பக்கத்தில் என்றென்றுமாய்
உண்டு நித்திய பேரின்பமே.
Credits


Christ-Life Fellowship
https://tot.org.in/

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More