ALBUM DETAILS

Album Image

Christ-Life Fellowship Tamil Songs

கிறிஸ்து வாழ்வு ஐக்கிய தமிழ் பாடல்கள்

Artist: Christ-Life Fellowship

Category: General

Total Songs: 12

Aandavare, Ummaiye Saarndhullen

ஆண்டவரே, உம்மையே சார்ந்துள்ளேன் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1.ஆண்டவரே, உம்மையே சார்ந்துள்ளேன்,
அடைக்கலப் பாறைமேல் சாய்ந்துள்ளேன்,
அரணான கோட்டையை நம்பியுள்ளேன்,
அணைத்து என்னைக் காத்திடுவீர்.

நீரே எந்தன் ஆண்டவர் என்பேன்! நீ
ரேயல்லால் செல்வம் வேறில்லை!
நீரே என் பங்கு, சுதந்தரம்!
நீரே என் பங்கைக் காக்கிறவர்!

2.இனிதான நிலங்கள் என் பங்கு,
வளமான சொத்துக்கள் என் சொந்தம்,
பங்கும், சொத்தும், சுதந்தரமும் நீரே,
மங்காத செல்வம் எல்லாம் நீரே.

3.ஆலோசனை ஆண்டவர் அருள்கிறார்,
அகத்தினுள் அறிவை உணா;த்துவார்,
அவர் குரல் இராக்காலமும் தொனிக்கும்,
ஆராதிப்பேன், அமர்ந்திருப்பேன்.

4.ஆண்டவரை என்முன்னே வைத்துள்ளேன்,
அவர் எந்தன் வலப்பக்கம் உள்ளார்,
ஆகவே நான் கலங்கேன், அசைவுறேன்,
ஆனந்தத்தால் நெஞ்சம் பூரிக்கும்.

5.என் ஆன்மாவைப் பாதாளத்தில் விடீர்,
உம் சுத்தனை அழிவைக் காணவொட்டீர்,
என் உடலும் உம் பாதுகாப்பில் தங்கும்,
நான் களிகூர்ந்து கெம்பீரிப்பேன்.
6.ஜீவ வழி எனக்குத் தெரிவித்தீர்,
உம் சமுகம் பூரண ஆனந்தமே,
உம் வலது பக்கத்தில் என்றென்றுமாய்
உண்டு நித்திய பேரின்பமே.


Credits


Christ-Life Fellowship
https://tot.org.in/

Neere En Dharisanamayirum

நீரே என் தரிசனமாயிரும் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1. நீரே என் தரிசனமாயிரும்,
நீரல்லால் வேறெல்லாம் மறையட்டும்;
எப்போதும் என் தியானமாயிரும்,
எந்நிலையிலும் என் கண்முன் இரும்.
2. என் வாக்கும், என் ஞானமுமாயிரும்,
என்னோடிரும், நான் உம்மோடிருப்பேன்,
என் தந்தையாய், நான் உம் மகனாய்,
என் சொந்தமாயிரும், நான் உம் சொந்தம்.
3. என் கேடகமாய், என் வாளாய் இரும்,
என் தஞ்சமாய், என் கோட்டையாய் இரும்,
என் மேன்மையாய், பூரிப்பாய் இரும்,
என்னை உயர்த்தும் விண்ணோனாய் வாழ.
4. நான் வேண்டும் நன்மை எல்லாமாய் இரும்,
வான் பூவில் நீர் என் வேந்தராய் இரும்,
என் நெஞ்சின் மா நேசமாயிரும்,
நீரே, நீரல்லால் வேறாரும் மேவேன்.
5. பூவின் செல்வங்கள், வீண் புகழ் வேண்டேன்,
நான் நாடும் சொத்தாய் என்றென்றும் இரும்,
என் முதல் தேடலாய் நீர் இரும்,
நான் தேடும் பொக்கிஷமாய் நீர் இரும்.
6. உம் அன்பால் என்னை நீர் முற்றும் கொள்ளும்,
உம் அன்பை வெள்ளம்போல் என்னில் ஊற்றும்,
என்ன நேர்ந்தாலும் அன்பின் தேவா,
என் நெஞ்சின் தரிசனமாய் இரும்.

1. Be Thou my Vision, O Lord of my heart;
Naught be all else to me, save that Thou art.
Thou my best Thought, by day or by night,
Waking or sleeping, Thy presence my light.
2. Be Thou my Wisdom, and Thou my true Word;
I ever with Thee and Thou with me, Lord;
Thou my great Father, I Thy true son;
Thou in me dwelling, and I with Thee one.
3. Be Thou my battle Shield, Sword for the fight;
Be Thou my Dignity, Thou my Delight;
Thou my soul’s Shelter, Thou my high Tower:
Raise Thou me heavenward, O Power of my power.
5. Riches I heed not, nor man’s empty praise,
Thou mine Inheritance, now and always:
Thou and Thou only, first in my heart,
High King of Heaven, my Treasure Thou art.
6. High King of Heaven, my victory won,
May I reach Heaven’s joys, O bright Heaven’s Sun!
Heart of my own heart, whatever befall,
Still be my Vision, O Ruler of all.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Vinnil Devasanaththin Mun

விண்ணில் தேவாசனத்தின்முன் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1. விண்ணில் தேவாசனத்தின்முன்
வல்ல மன்றாட்டெனக்குண்டு!
அன்புருவாய் ஆசாரியர்
என்றும் வாழ்ந்து வேண்டுகின்றார்!
என் பேர் உம் கையில் பொறித்தீர்,
என் பேர் உம் நெஞ்சில் பதித்தீர்,
விண்ணில் நின்று நீர் சேவிக்க
என்னைத் தள்ளுவார் யார் உண்டு?

2. சாத்தான் குற்றம் சாட்டுகையில்,
சோதனையால் நான் சோர்கையில்,
விண்ணை நோக்கிப் பார்க்கின்றேன், என்
பாவம் யாவும் தீர்த்தவரை!
என் பாவ ஆன்மாவை மீட்க
மாண்ட மாசில் இரட்சகரை
கண்ணோக்கி நீதியின் தேவன்
மன்னித்தென்னை விடுவித்தார்!

2. பாரீர், உயிர்த்த செம்மறி
மாசில்லா என் செம்மை நீதி!
மாறாதென்றும் இருப்பவர்,
மாட்சி கிருபையின் வேந்தர்!
உம்மோடொன்றானேன், சாகேன் நான்,
உம் இரத்தம் என்னை வாங்கிற்றே/கொண்டதே,
விண்ணில் கிறிஸ்துவோடென் ஜீவன்
தேவனில் மறைந்துள்ளதே!

1. Before the throne of God above
I have a strong and perfect plea:
A great High Priest whose name is Love,
Who ever lives and pleads for me.
My name is graven on his hands,
My name is written on his heart.
I know that while in Heav'n he stands
No tongue can bid me thence depart,
No tongue can bid me thence depart.

2. When Satan tempts me to despair
And tells me of the guilt within,
Upward I look and see him there,
Who made an end of all my sin.
Because the sinless Savior died,
My sinful soul is counted free,
For God the just is satisfied
To look on him and pardon me,
To look on him and pardon me.

3. Behold him there, the risen Lamb,
My perfect, spotless righteousness,
The great unchangeable I AM,
The King of glory and of grace.
One with himself I cannot die;
My soul is purchased by his blood.
My life is hid with Christ on high,
With Christ, my Savior and my God,
With Christ, my Savior and my God.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Oodhum Devaaviye

ஊதும் தேவாவியே Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1.ஊதும் தேவாவியே!
புத்துயிர் நிரப்பும்,
உம் வாஞ்சையை வாஞ்சித்திட
உம் செய்கை செய்திட.
2. ஊதும் தேவாவியே!
என் உள்ளம் கழுவும்,
என் சித்தம் சாயும், உம் சித்தம்
செய்திட தாங்கிட!
3. ஊதும் தேவாவியே!
என்னை முற்றும் கொள்ளும்
என்னில் மண்ணான யாவிலும்
விண் தீ ஒளிர்ந்திட.
4. ஊதும் தேவாவியே!
சாவை நான் வென்றிட
நித்தியமாய் உம் ஜீவனால்
உம்மோடு வாழ்ந்திட!

1.Breathe on me, Breath of God,
Fill me with life anew,
That I may love what Thou dost love,
And do what Thou wouldst do.
2.Breathe on me, Breath of God,
Until my heart is pure,
Until my will is one with Thine,
To do and to endure.
3.Breathe on me, Breath of God,
Till I am wholly Thine,
Until this earthly part of me
Glows with Thy fire divine.
4.Breathe on me, Breath of God,
So shall I never die,
But live with Thee the perfect life
Of Thine eternity.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Ummodondru Naan Yesuve

உம்மோடொன்று நான் இயேசுவே Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1. உம்மோடொன்று நான் இயேசுவே,
உம்மோடொன்று ஆவியில்;
நீர் முற்றும் என் சொந்தமானீர்,
நீரே என்னில் வாழ்கின்றீர்.

ஒன்றானோம், ஒன்றானோம்,
உம்மோடு ஒன்றானோம்;
நாளும் உம்மில் பங்கடைந்தேன்,
நீர் எனக்கெல்லாம் ஆனீர்.

2. உம் மனிதப் பண்புநிறை
உம் மனித வாழ்க்கையில்;
பங்குறுகிறேன்--முற்றும் நீர்
கீழ்ப்படிந்த வாழ்க்கையில்.

3. உம்மோடொன்றும் மரணத்தில்
சிலுவையில் மரித்தேன்;
உலகெனக்கு மாண்டது,
நான் உலகிற்கு மாண்டேன்.

4. உம்மோடொன்று உம் உயிர்ப்பில்
உயிர்த்தேன் உம்மில் வாழ;
என்னில் அந்த ஜீவன் நீரே
வாழ்வேன் அந்த ஜீவனால்.

5. உம்மோடொன்று விண்ணேற்றத்தில்
உம்மோடு நான் விண்ணிலே;
இங்கு நான் ஓர் சஞ்சாரியே
என் மெய் ஜீவன் உம்மில்தான்.

6. உம்மோடொன் றரியணையில்
உம் அதிகாரம், ஜீவன்
பங்கடைந்து வாழ்கிறேனே
நான் உம்மில், நீர் என்னிலே.

1. I am one with Thee, Lord Jesus,
One in spirit now with Thee;
All Thyself I now possess, Lord,
All Thou art now lives in me.
One with Thee, one with Thee,
One with Thee, one with Thee;
Day by day I share Thy riches,
Thou art everything to me.
2. Now I share Thy human life, Lord,
Filled with Thy humanity,
All of Thy complete obedience
Is available to me.
3. One with Thee in crucifixion,
On the cross I died in Thee;
I am dead unto the world, Lord,
And the world is dead to me.
4. One with Thee in resurrection,
Risen now to live in Thee,
With that life which is Thyself, Lord,
Now in me, Lord, even me.
5. One with Thee in Thine ascension,
In the heavens now with Thee;
Here a pilgrim and a stranger,
My true life is hid in Thee.
6. One with Thee in Thine enthronement,
Sharing Thine authority,
Even as I share Thy life, Lord,
I in Thee and Thou in me.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

En Nokkam Neer, En Nokkum Neer

என் நோக்கம் நீர், என் நோக்கும் நீர் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1.என் நோக்கம் நீர், என் நோக்கும் நீர்,
என் ஏக்கமும் நீரே;
என் நாட்டம் நீர், என் ஈட்டம் நீர்,
கொண்டாட்டமும் நீரே.

நீர் போதும் இயேசுவே!
நீரே எல்லாமுமே!
நீர் இல்லையேல் வாழ்வில்லையே!
நீர் போதும் என் வாழ்விலே!

2.என் நாதம் நீர், என் நாதன் நீர்,
என் வேதமும் நீரே,
என் ஆதி நீர், என் அந்தம் நீர்,
என் பாதையும் நீரே.

3.என் உயிர் நீர், என் வழி நீர்,
என் உண்மையும் நீரே,
என் மையம் நீர், என் எல்லை நீர்,
என் மெய்மையும் நீரே.

4.என் வாழ்வு நீர், என் வளம் நீர்,
என் வல்லமை நீரே.
என் மீட்பு நீர், என் தூய்மை நீர்,
என் நீதியும் நீரே.

5.என் பானம் நீர், என் ஊணும் நீர்,
என் வான ஈவும் நீர்,
என் மீட்பர் நீர், என் மேய்ப்பர் நீர்,
என் மேய்ச்சலும் நீரே.

6. ஆலயம் நீர், ஆண்டவர் நீர்,
ஆசாரியரும் நீர்,
என் பலி நீர், என் விழா நீர்,
என் தொழுகை நீரே.

7. என் ஆவல் நீர், என் ஆசை நீர்,
என் ஆதரவும் நீர்,
ஆதாரம் நீர், ஆதாயம் நீர்,
ஆசீர் எல்லாம் நீரே.

8. என் சாய்வு நீர், என் ஓய்வு நீர்,
என் ஆய்வும், தீர்வும் நீர்,
என் வீடு நீர், என் நாடு நீர்,
என் தேடலும் நீரே.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Nesithum, Nanmadhippo Venden

நேசித்தும், நன்மதிப்போ வேண்டேன் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1. நேசித்தும், நன்மதிப்போ வேண்டேன்;
சேவித்தும், சன்மானமோ வேண்டேன்;
உழைத்தும், என்றும் எண்ணவோ வேண்டேன்;
துன்புற்றும், என்னைக் கருதவோ வேண்டேன்.

2. இது ஊற்றுதல், பருகுதலில்லை;
இது உடைத்தல், பேணுதலில்லை;
மற்றோர் ஆசீர்க்காய்த் துன்புறும் வாழ்க்கை;
ஆறுதலும், அன்பும் நல்கும் வாழ்க்கை.

3. பரிதாபம், பரிவு நான் ஒப்பேன்;
பாராட்டும், சீராட்டும் நான் ஒப்பேன்;
தனியனாய், மறக்கப்பட்டோனாய்,
பேச்சற்றோனாய், கைவிடப்பட்டோனாய்.

4. நீதி கிரீடத்தின் கிரயமாய்க்
கண்ணீர், குருதி;
உத்தம வாழ்வின் கிரயமாய்
எல்லாம் இழந்தேன்.

5. கர்த்தாவே, அன்று நீர் பூவில் வாழ்ந்தபோது
தேடி நடந்த பாதை இதே;
காயங்கள், நட்டங்கள் மகிழ்வுடன் சகித்தீர்
மாந்தர் நெருங்கி வந்திளைப்பாற.

6. இன்னும் போகும் தூரம் அறியேன்;
பின்னோக்குதல் இன்றி முன்னே செல்கிறேன்.
பின்பற்றுவேன் உம் பூரண முன்மாதிரி
நன்றியீனம் கசப்பின்றி தாங்கி.

7. கர்த்தாவே, ஜெபிப்பேன் இவ்வேளை, துடைப்பீர்
எந்தன் மறைவான கண்ணீர் யாவும்;
கர்த்தாவே, நீரே என் பரிசென்றறிவேன்,
பிறர்க்கென்றும் ஆசீர்வாதமாகுவேன்.

1. Let me love and not be respected;
Let me serve and not be rewarded;
Let me labor and not be remembered;
Let me suffer and not be regarded.
2. ‘Tis the pouring, not the drinking;
’Tis the breaking, not the keeping—
A life suff’ring to seek others’ blessing,
A life loving and true comfort giving.
3. Not expecting pity or concern,
Not accepting solace or praise;
Even lonely, even forgotten;
Even wordless, even forsaken.
4. Tears and blood for the righteous crown
My price shall be; losing all,
My cost for a faithful pilgrim’s life.
5. ‘Twas the life, O Lord, that You chose to live
In those days when on earth You walked,
Gladly suff’ring all injuries and loss
So that all might draw near and repose.
6. I cannot see how much farther I shall go;
Still I press on, knowing there is no return.
Let me follow Your pattern, so perfect and true,
Bearing all gratefully without complaint.
7. In this time of trial, O my Lord,
I pray that You would wipe my hidden tears away;
Let me learn, O Lord, You are my reward;
Let me be others’ blessing all my days.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Barangal Koodum, Um Kirubaiyum Koodum

பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1. பாரங்கள் கூடும், உம் கிருபையும் கூடும்!
பாடுகள் சேரும், உம் பெலனும் சேரும்!
சோர்வு பெருகும், உம் பரிவும் பெருகும்!
சோதனைகள் சூழும், உம் ஓய்வும் சூழும்!
உம் அன்பின் எல்லையை, அருளின் அளவை
ஆற்றலின் வரம்பைக் கண்டவர் யார்?
இயேசுவில் முடிவில்லா உம் செல்வங்களை
ஈகின்றீர், ஈகின்றீர், மேலும் ஈகின்றீர்.

2. நம் தாங்கும் திறன் தீர்ந்து வற்றிப்போகையில்,
நம் பெலன் பாதியில் இற்றுப்போகையில்,
பூவின் வளங்கள் எல்லாம் அற்றுப்போகையில்,
நம் தந்தை வழங்கத் தொடங்குகின்றார்!

3. தேவனின் வளங்கள் உன் தேவையை மிஞ்சும்,
அஞ்சாதே! ஈவதே தந்தையின் நெஞ்சம்!
சாய்ந்துகொள், தாங்குவார்! உன் பாரங்கள் கொஞ்சம்!
தந்தையின் நித்திய புயம் உன் தஞ்சம்.

1. He giveth more grace when the burdens grow greater,
He sendeth more strength when the labors increase;
To added afflictions He addeth His mercy,
To multiplied trials, His multiplied peace.
His love has no limits, His grace has no measure,
His power no boundary known unto men;
For out of His infinite riches in Jesus
He giveth, and giveth, and giveth again.

2. When we have exhausted our store of endurance,
When our strength has failed ere the day is half done,
When we reach the end of our hoarded resources
Our Father’s full giving is only begun.

3. Fear not that thy need shall exceed His provision,
Our God ever yearns His resources to share;
Lean hard on the arm everlasting, availing;
The Father both thee and thy load will upbear.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Yesuve, Ennil Valarum

இயேசுவே, என்னில் வளரும் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1. இயேசுவே, என்னில் வளரும்,
மற்றெல்லாம் குன்றட்டும்.
என் இதயம் உம்மை நெருங்கட்டும்,
பாவம் ஓயும்.

நாளும் என் பலவீனத்தில்
உம் பெலன் தாங்கட்டும்.
உம் ஒளி இருள் போக்கும்,
உம் ஜீவன் சாவை நீக்கும்.

2. என்மேல் வீசும் உம் பிரகாசத்தால்
மங்கும் தீ(ய) எண்ணம்.
நான் ஒன்றுமில்லை, நீரே எல்லாம்,
நாளும் போதியும்.

3. தூயர், ஞானர், மெய்யர் உம் மாட்சி
இன்னும் காணட்டும்,
இன்ப துன்பத்தில் நான் உம்
ஜீவ சாயலாகட்டும்.

4. உம் களிப்பால் நிரப்பும்,
தெய்வ பலத்தால் தாங்கும்;
உம் பேரன்பின் சுடர் முற்றும்
என்மூலம் வீசட்டும்.

5. சுயம் இன்னும் தேயட்டும்,
நீர் என் ஜீவனாய் மாறும்;
உம் கிருபையால் நாளும் உம்போல்
நான் வாழச் செய்திடும்.

1. O Jesus Christ, grow Thou in me,
And all things else recede;
My heart be daily nearer Thee,
From sin be daily freed.
Each day let Thy supporting might
My weakness still embrace;
My darkness vanish in Thy light,
Thy life my death efface.

2. In Thy bright beams which on me fall,
Fade every evil thought;
That I am nothing, Thou art all,
I would be daily taught.

3. More of Thy glory let me see,
Thou Holy, Wise, and True;
I would Thy living image be,
In joy and sorrow too.

4. Fill me with gladness from above,
Hold me by strength divine;
Lord, let the glow of Thy great love
Through all my being shine.

5. Make this poor self grow less and less,
Be Thou my life and aim;
Oh, make me daily through Thy grace
More meet to bear Thy name.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Ennai Aayndhen Nenjam Ariyum

என்னை ஆய்ந்தென் நெஞ்சம் அறியும், Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

என்னை ஆய்ந்தென் நெஞ்சம் அறியும்,
சோதித்தென் உள்ளம் காணும்;
தீய வழி என்னில் உண்டோ என்று பாரும்,
ஜீவ வழி, ஜீவ வழி,
ஜீவ வழியில் நடத்தும்.

என்னை ஆய்ந்தீர், உள் அறிந்தீர்,
என் அமர்தல், என் எழுதல்,
என் எண்ணங்கள் தோன்றுமுன் அறிவீர்,
என் வழிகள் அறிவீர்,
என் வழிகள் அறிவீர்.

Search me, O God, and know my heart;
Try me and know my thoughts;
And see if there be wicked way in me;
Lead me in the way, lead me in the way,
Lead me in the way everlasting.
You have searched me,
You have known me,
My downsitting, my uprising;
You understand my thoughts from afar;
You know all my ways,
You know all my ways.




Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Kalvaari Malaiyil Kora, Maa Siluvai

கல்வாரி மலையில் கோர, மா சிலுவை, Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1. கல்வாரி மலையில் கோர, மா சிலுவை,
பாடுகள், நிந்தைகளின் சின்னம்!
பாவிகளை மீட்க பரன் மாண்டதினால்
மேவி சிலுவை நேசிப்பேன்.

முற்றிலும் ஏற்றேன் சிலுவையை,
வெற்றிகள் பலியாய்ப் படைப்பேன்!
பற்றுவேன் சிலுவையின் வழி,
பதிலாய் விண்முடி சூட்டுவீர்!

2. நிந்தையாய் உலகம் கருதும் சிலுவை
விந்தையாய்க் கவர்ந்தது என்னை!
வந்தார் செம்மறியாய் மாட்சிமை துறந்து
சுமந்தார் பாவச் சிலுவை!

3. இரத்தம் சிந்தும் தேவன் தொங்கும் வன் சிலுவை
எத்தனை அற்புதம் இக்காட்சி!
எத்தனை மன்னித்து, சுத்தமாக்கிடவே
சித்தமாய் இயேசு மரித்தார்.

4. உண்மையாயிருப்பேன் சிலுவைச் செய்திக்கு
இன்பமாய் நிந்தையைச் சகிப்பேன்;
அழைப்பார் ஒருநாள், செல்லுவேன் என் இல்லம்,
அங்கு மகிமை என் பங்கு.

1. On a hill far away stood an old rugged cross,
The emblem of suffering and shame;
And I love that old cross where the dearest and best
For a world of lost sinners was slain.
So I'll cherish the old rugged cross,
Till my trophies at last I lay down;
I will cling to the old rugged cross,
And exchange it some day for a crown.
2. O that old rugged cross, so despised by the world,
Has a wondrous attraction for me;
For the dear Lamb of God left his glory above
To bear it to dark Calvary.
3. In that old rugged cross, stained with blood so divine,
A wondrous beauty I see,
For 'twas on that old cross Jesus suffered and died,
To pardon and sanctify me.
4. To the old rugged cross I will ever be true;
Its shame and reproach gladly bear;
Then he'll call me some day to my home far away,
Where his glory forever I'll share.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

Neer Thedi Katharum Maanpol

நீர் தேடிக் கதறும் மான்போல் Tamil - தமிழ்

By downloading, you agree to our Terms and Conditions.

1. நீர் தேடிக் கதறும் மான்போல்
என் ஆத்துமா உம்மைத் தேடும்;
நீரே என் நெஞ்சின் வாஞ்சை,
என் ஆவி உம்மைத் தொழ நாடும்.

நீர் மட்டுமே எனை ஈர்த்தீர்,
உம் ஆவிக்கென் ஆவி நெகிழும்;
நீரே என் நெஞ்சின் வாஞ்சை,
உம்மைத் தொழ உள்ளம் மகிழும்.

2. நீர் வேந்தர், ஆயினும்
என் நண்பனும், சோதரனும் ஆனீர்!
யாரினும், யாவினும்மேலாய்
உம்மில் நான் அன்புகூர்கின்றேன்.

3. பொன் வெள்ளி வேண்டாம், நீர் போதும்,
நீரே என் நெஞ்சின் நிறைவு;
கண்மணிபோல் நீர் எனக்கருமை,
நீரே மெய் மகிழ்ச்சி.

1.As the deer panteth for the water
So my soul longeth after Thee;
You alone are my heart's desire
And I long to worship Thee.
You alone are my strength, my shield;
To You alone may my spirit yield;
You alone are my heart's desire
And I long to worship Thee.

2.You're my friend and You are my brother
Even though You are a king;
I love You more than any other
So much more than anything.

3.I want You more than gold or silver
Only You can satisfy;
You alone are the real joy giver
And the apple of my eye.


Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More