Lyrics
1. இயேசுவே, என் நேசரே, மனிதன் ஆனீர் எதற்காய்,
நேசரே, மனிதன் ஆனீர் எதற்காய்;
இயேசுவே, என் நேசரே, மனிதன் ஆனீர் எமக்காய்,
நேசரே, உம்மைத் தாழ்த்தினீர் மனுவாய்!
2. இயேசுவே, என் நேசரே, மனுவாய் வாழ்ந்தீர் எதற்காய்,
நேசரே, மனுவாய் வாழ்ந்தீர் எதற்காய்;
இயேசுவே, என் நேசரே, மனுவாய் வாழ்ந்தீர் எமக்காய்,
நேசரே, கீழ்ப்படிந்தீரே மகனாய்!
3. இயேசுவே, என் நேசரே, குருசில் மாண்டீர் எதற்காய்,
நேசரே, குருசில் மாண்டீர் எதற்காய்;
இயேசுவே, என் நேசரே, குருசில் மாண்டீர் எமக்காய்,
நேசரே, பாவம் தீர்க்கின்ற பலியாய்!
4. இயேசுவே, என் நேசரே, உயிர்த்தெழுந்தீர் எதற்காய்,
நேசரே உயிர்த்தெழுந்தீர் எதற்காய்;
இயேசுவே, என் நேசரே, உயிர்த்தெழுந்தீர் எமக்காய்,
நேசரே, உயிர்ப்பில் புதுப்படைப்பாய்!
5. இயேசுவே, என் நேசரே, பரம் ஏறினீர் எதற்காய்,
நேசரே, பரம் ஏறினீர் எதற்காய்;
இயேசுவே, என் நேசரே, பரம் ஏறினீர் எமக்காய்,
நேசரே, பரம் ஏறினீர் ஜெயமாய்.
6. இயேசுவே, என் நேசரே, மன்றாடுகின்றீர் எதற்காய் ,
நேசரே மன்றாடுகின்றீர் எதற்காய்;
இயேசுவே, என் நேசரே, மன்றாடுகின்றீர் எமக்காய்,
நேசரே, முற்றிலும் இரட்சிப்பதற்காய்.
7. இயேசுவே, என் நேசரே, மீண்டும் வருவீர் எதற்காய்,
நேசரே, மீண்டும் வருவீர் எதற்காய்;
இயேசுவே, என் நேசரே, மாட்சியில் வாரும் எமக்காய்,
நேசரே, விரைவாய் வாரும் எமக்காய்.
Credits
Christ-Life Fellowship
https://tot.org.in/