Yesuve, Nam Ore Meippar

இயேசுவே, நம் ஒரே மேய்ப்பர்

Artist: Christ-Life Fellowship

Album: Christ-Life Fellowship Tamil Songs

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
1. இயேசுவே, நம் ஒரே மேய்ப்பர்!
தம்முயிர் தந்த மீட்பர்!
தம் ஜீவன் நாம் பெற வந்தார்,
பூரணமாகத் தந்தார்.

நாம் ஒரே மந்தை,
தேவன் நம் அன்பின் தந்தை,
ஜீவன் பெய்வதவர் சிந்தை,
பாரில் பரம விந்தை!

2. நம்மைப் பேர் சொல்லி அழைத்தார்,
அன்பின் குரலைக் கேட்டோம்,
முன்செல்கின்றார் வழிகாட்டி,
பின்செல்வோம் அடியொற்றி.

3. பசும்புல் மேய்ச்சலும் ஒன்றே,
பருகும் நீரும்; ஒன்றே,
பரம விருந்தும் ஒன்றே,
பங்குறும் கிறிஸ்து ஒன்றே,

4. மந்தைக்காய்த் தம் ,ரத்தம் சிந்தும்
அன்பின் சிகரம் கண்டோம்!
அன்பு கொண்டு சோதரர்;க்காய்
நாமும் நம்மை ஊற்றுவோம்.

5. சோதரர்கள் ஒருமித்து
வாழ்வது நன்மை, ,ன்பம்!
ஜீவனும், ஆசீரும்; தங்கும்
தேவனின் ,ல்லம் எங்கும்.
Credits

Christ-Life Fellowship
https://tot.org.in/

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More