Lyrics
1.உம் இரத்தம் சிந்தினீர்,
உம் உயிரும் தந்தீர்,
சாவினின்று மீட்க,
என்னை உயிர்ப்பிக்க!
உயிரும் தந்தீர் எனக்காய்!
உமக்கென்ன தந்தேன்?
உயிரும் தந்தீர் எனக்காய்!
உமக்கென்ன தந்தேன்?
2. கானகப் பூமியில்
ஆண்டுகள் கடந்தீர்;
களைப்பில், துன்பத்தில்
தனித்தே நடந்தீர்.
பல்லாண்டு தந்தீர் எனக்காய்!
ஓராண்டும் தந்தேனோ?
பல்லாண்டு தந்தீர் எனக்காய்!
ஓராண்டும் தந்தேனோ?
3.விண்ணின் அரியணை
மாட்சிமை துறந்தீர்;
நித்தியமாக நான்
உம் மாட்சி அறிய.
எல்லாம் இழந்தீர் எனக்காய்!
நான் யாது இழந்தேன்?
எல்லாம் இழந்தீர் எனக்காய்!
நான் யாது இழந்தேன்?
4.தாங்கொணாப் பாடுகள்,
சொல்லொணா வேதனை,
தாங்கினீர் மௌனமாய்,
நான் நரகம் தப்ப.
எல்லாம் சகித்தீர் எனக்காய்!
நான் யாது சகித்தேன்?
எல்லாம் சகித்தீர் எனக்காய்!
நான் யாது சகித்தேன்?
5.மன்னிப்பு மாதிரள்!
இரட்சிப்பு பூரணம்!
உன்னத ஈவுகள்,
ஈவின்மேல் ஈவுகள்;
எல்லாம் கொணர்ந்தீர் எனக்காய்!
நான் யாது கொணர்ந்தேன்?
எல்லாம் கொணர்ந்தீர் எனக்காய்!
நான் யாது கொணர்ந்தேன்?
6.என் வாழ்வு, ஆண்டுகள்,
உமக்கர்ப்பணித்தேன்.
நான் அன்பின் அடிமை,
வேறு தளை வேண்டாம்!
உம்மையே தந்தீர் எனக்காய்!
உமக்கென்னைத் தந்தேன்.
உம்மையே தந்தீர் எனக்காய்!
உமக்கென்னைத் தந்தேன்.
1. Thy Life was giv'n for me,
Thy blood, O Lord, was shed,
That I might ransomed be,
And quickened from the dead;
Thy Life was giv'n for me, for me;
What have I giv'n for Thee?
2. Long years were spent for me
In weariness and woe,
That through eternity
Thy glory I might know;
Long years were spent for me, for me;
Have I spent one for Thee?
3. Thy Father's home of light,
Thy rainbow-circled throne,
Were left for earthly night,
For wanderings sad and lone;
Yea, all was left for me, for me;
Have I left aught for Thee?
4. Thou, Lord, hast borne for me
More than my tongue can tell
Of bitterest agony,
To rescue me from hell;
Thou suff'redst all for me, for me;
What have I borne for Thee?
5. And Thou hast brought to me
Down from Thy home above
Salvation full and free,
Thy pardon and Thy love;
Great gifts, great gifts Thou broughtest me;
What have I brought to Thee?
6. Oh, let my life be given,
My years for Thee be spent;
World-fetters all be riven,
And joy with suff'ring blent;
Thou gav'st Thyself for me, for me,
I give myself to Thee.
Credits
Christ-Life Fellowship
https://tot.org.in/