Devathi Devanai

தேவாதி தேவனை

Artist: Pr.James

Album: TOWDAH

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
தேவாதி தேவனை ஆராதிப்பேன்
என் இயேசு ராஜனை ஆராதிப்பேன்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை காண்கின்ற தேவனவர்

ஆவியோடும் ஆராதிப்பேன்
உண்மையோடும் ஆராதிப்பேன்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை காண்கின்ற தேவனவர்

எரிகோ மதிலே முன் நின்றாலும்
யோர்தான் நதியே குறுக்கிட்டாலும்
சிங்கத்தின் குகையில் நான் நின்றாலும்
அக்கினி ஜுவாலையில் வீழ்ந்திட்டாலும்
என்னை காக்கும் தேவனவர்
எனது நிழலாய் நிற்கின்றவர் - அவர் நல்லவர்...

உள்ளங்கையில் வரைந்தவராம் - என்னை
கண்ணின் மணிபோல் காப்பவராம்
பாவ சாபங்கள் நீக்கி என்னை
சொந்த பிள்ளையாய் மாற்றினாரே
வாக்கு மாறா தேவனவர்
வாழ்வை தந்த கர்த்தரவர் - அவர் நல்லவர்...

யஹோவா ராஃபா ஆராதிப்பேன்
யஹோவா ஷம்மா ஆராதிப்பேன்
யஹோவா ஈரே ஆராதிப்பேன்
யஹோவா நிசியே ஆராதிப்பேன்
எல்ஷடாய் உம்மை ஆராதிப்பேன்
எபினேசர் உம்மை ஆராதிப்பேன் - அவர் நல்லவர்...
Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More