Urrakkam

உறக்கம் தெளிவோம் உற்சாகம்

Artist: Emil Jebasingh

Album: Emil jebasingh Songs -2

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான் மழை மாரி பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்

1. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும்கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம் - உறக்கம்

2. கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதில்லை - உறக்கம்

3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம் - உறக்கம்

4. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார் - உறக்கம்
Credits

Produced by Bro.Emil Jebasingh

CONNECT WITH US

WWW.FREEGOSPELSONGS.IN

Part of abcnet.in , A non profit initiative

Free | Ad Free | Indian Languages | Gospel only

Designed by CROSSEDGE Technologies Pvt. Ltd

Home Artists Albums Songs More